வெயில் வறுத்தெடுக்கும் நிலையில் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் பதநீர் மற்றும் நுங்கு விற்பனை களைகட்டியுள்ளது
கடையநல்லூரை சுற்றியுள்ள வேலப்பநாடாருர் ,தண்ணுத்து ,சேர்ந்தமரம் ,கடையாலுருடி போன்ற கிராமங்களில் பனை மரங்கள் அதிக அளவு உள்ளன .இந்த பனைமரத்தை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த பகுதிகளில் வாழ்ந்து வருகின்றன . இதனிடையே பதநீர் மற்றும் நுங்கு சீசன் தொடங்கியதை அடுத்து இங்கு பதநீர் விற்பனை களை கட்டியுள்ளது. மேலும் கோடை வெயில் வறுத்தெடுப்பதால் நுங்கு விற்பனையும் அதிகரித்துள்ளது. பதநீருடன் நுங்கு சேர்த்து சாப்பிடுவதால் இதய நோய் ,மஞ்சள் காமாலை போன்ற நோய் பாதிப்புகளை தடுக்கலாம் என்றும் உடல் குளிர்ச்சி அடையும் என்றும் என விவசாயிகள் கூறுகின்றனர்