நேபாளத்தில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தை பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வெர்மா, ஜோதி சுரேகா ஆகியோர் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 13 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக தொடங்கின. 10 நாட்கள் நடைபெற உள்ள இந்த போட்டியில் 2 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட வீரர்கள் 26 பிரிவுகளில் பங்கேற்க உள்ளனர். இதன் 2 ஆம் நாளில் நடந்த வில்வித்தை போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வெர்மா, ஜோதி சுரேகா இணை தங்கம் வென்றது. சீன – தைபே இணையை 158 க்கு 151 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்திய இந்த இணை இந்தியாவிற்கு 3வது தங்கத்தை பெற்று கொடுத்தது. இந்நிலையில், கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் பிரிவின் தகுதி சுற்றில் வெற்றி பெற்று இந்தியா 9 ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் பங்கேற்க உள்ளது. தற்போது வரை இந்திய அணி 3 தங்கம், 8 வெள்ளி 3 வெண்கலப் பதக்கங்களுடன் புள்ளி பட்டியலில் 2 ஆம் இடத்தில் உள்ளது.