ஆசிய கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் கட்டாய வெற்றியில் இந்தியா

ஆசிய கோப்பை கால்பந்தாட்ட போட்டியில், பஹ்ரைன் அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. தனது முதல் லீக் ஆட்டத்தில் தாய்லாந்து அணியை வீழ்த்திய இந்தியா, அடுத்த போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்திடம் வீழ்ந்தது. இந்தியா தனது பிரிவில் புள்ளிப் பட்டியலில் தாய்லாந்துடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. தனது கடைசி லீக் ஆட்டத்தில், பஹ்ரைன் அணியை திங்கட்கிழமையன்று இந்தியா சந்திக்கவுள்ளது. அடுத்து சுற்றுக்கு நேரிடையாக செல்ல, இந்த போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. அதேவேளையில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தாய்லாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் தாய்லாந்து தோற்றால் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version