ஆசிய தடகள சாம்பியன்ஷிப்.. தங்கம் வென்ற இந்தியாவின் ஜோதி யாராஜி!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்:

இருபத்து ஐந்தாவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  இதன் இரண்டாவது நாளான நேற்று மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் நடப்பெற்றது. அதில் நம் இந்தியாவைச் சேர்ந்த ஜோதி யாராஜி களமிறங்கினார்.  100 மீட்டர் தடைத்தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யார்ராஜி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.  பந்தய தூரத்தை அவர், 13.09 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். ஜப்பானின் டெராடா அசுகா (13.13 விநாடிகள்), அயோகி மசுமி (13.26 விநாடிகள்) ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் அஜய் குமார் சரோஜ் பந்தய தூரத்தை 3:41.51 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். ஆசிய தடகள போட்டியில் அஜய்குமார் சரோஜ் பதக்கம் வெல்வது இது 3-வது முறையாகும். 2017-ம் ஆண்டு தங்கப் பதக்கமும், 2019-ல் வெள்ளிப் பதக்கமும் அவர், வென்றிருந்தார்.

ஆடவருக்கான டிரிப்பிள் ஜம்ப்பில் இந்தியாவின் அப்துல்லா அபுபக்கர் 16.93 மீட்டர் நீளம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். ஜப்பானின் ஹிகாரு இகேஹடா (16.73) வெள்ளிப் பதக்கமும், தென் கொரியாவின் கிம் ஜாங்வூ (16.59) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

Exit mobile version