ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது.இதனையடுத்து காங்கிரஸ் கட்சியில் யார் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார்கள் என்ற குழப்பம் கடந்த 3 நாட்களாக நிலவி வந்தது. மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டை முதலமைச்சராக காங்கிரஸ் மேலிடம் இன்று அறிவித்தது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மேலிட பார்வையாளர் வேணுகோபால், சச்சின் பைலட் துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இதனையடுத்து ராஜஸ்தானில் முதலமைச்சர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.