தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கே. சண்முகம் பதவியேற்பு

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கே. சண்முகம் பதவியேற்றுக் கொண்டார்.

தலைமை செயலாளராக இருந்து வந்த கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம் இன்றோடு முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய தலைமை செயலாளரை தேர்வு செய்து தமிழக அரசு அறிவித்தது. நிதித்துறை செயலாளராக பணிபுரிந்த கே.சண்முகத்திற்கு பதவி உயர்வு அளித்து, தமிழகத்தின் 46ஆவது தலைமை செயலாளராக தமிழக அரசு அறிவித்தது. அதன் படி, புதிய தலைமை செயலாளராக கே. சண்முகம் இன்று பதவியேற்றுக் கொண்டார். தலைமை செயலகத்தில் பதவியேற்று கொண்ட அவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பதவியேற்புக்கு முன்னதாக அவர், முதலமைச்சரை சந்தித்த வாழ்த்து பெற்றார். அவர் கடந்த 9 ஆண்டுகளாக நிதித்துறை செயலாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version