மழை அளவு குறைந்துள்ளதால் பவானிசாகர் அணைக்கான நீர் வரத்து குறைவு

ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை அளவு குறைந்துள்ளதால் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.

பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 3 நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து அணையின் நீர் மட்டம் 96 அடியை எட்டியது. இந்நிலையில் தற்போது, மழை அளவு குறைந்துள்ளதால் அணைக்கான நீர் வரத்து 10 ஆயிரத்து 126 கன அடியிலிருந்து 6 ஆயிரத்து 483 அடியாக குறைந்துள்ளது. இதையடுத்து காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 96 புள்ளி 05 அடியாகவும், நீர் இருப்பு 25 புள்ளி 7 டிஎம்சி யாகவும் உள்ளது. அணையிலிருந்து பாசனத்திற்காக பவானி ஆற்றில் ஆயிரத்து 350 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2 ஆயிரத்து 300 கனஅடி நீரும் என மொத்தம் 3 ஆயிரத்து 650 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Exit mobile version