டெல்லியில் அதிகாலை முதலே காற்று மாசு அதிகமாக காணப்பட்டதால் புகையானது பனி போல காட்சியளித்தது.
காற்று மாசை அளவிடும் கருவியில் மிக மோசமான அளவான 400ஐ காற்று மாசு தாண்டி இருந்தது. இதனால் டெல்லியில் அதிகாலையில் மக்கள் முக கவசத்துடன் நடைபயிற்சியில் ஈடுபட்டனர். அங்குள்ள முக்கிய இடங்களான அக்பர் நகர், இந்தியா கேட், ஜந்தர் மந்தர் உள்ளிட்ட இடங்கள் காற்று மாசு அதிகமாக இருந்ததால் புகை மூட்டமாக காட்சியளித்தது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு டெல்லியில் காற்று மாசு அதிகமாக காணப்படும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு காற்றின் போக்கில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இதனால் காற்று மாசு குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.