தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

உள்ளாட்சித் தேர்தலுக்காக தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான உடன், தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த, மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் பார்வையாளர்களாக, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில், சேலம் மாவட்ட தேர்தல் பார்வையாளராக காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். நாகை மாவட்ட தேர்தல் பார்வையாளராக ஞானசேகரனும், நாமக்கல் மாவட்ட தேர்தல் பார்வையாளராக ஜெகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் பார்வையாளராக அதுல் ஆனந்த், நீலகிரி மாவட்ட தேர்தல் பார்வையாளராக ஜோதி நிர்மலா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், பிற மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

Exit mobile version