பாதுகாப்பு சாதனமாக மாறி வரும் Android Phones

ஐ-போன்களை விட, Android ஸ்மார்ட்போன்கள் பாதுகாப்பாகவும், சிறப்பான ஹேக்கிங் தடுப்பு முறைகள் கொண்டதாகவும் உள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இது ஆண்ட்ராய்டு பயனாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கூகுள், ஆப்பிள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய புதிய வழிமுறைகளை அறிமுகம் செய்கின்றன. ஆனால், ஹேக்கர்கள் அதை உடைத்துக் கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில், தேசிய தரநிலை மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஒரு அங்கமான, தி வைஸ் ஆய்வை மேற்கொண்டது. செல்போன் இயங்குதளத்தின் பாதுகாப்பை பரிசோதிக்கும், செல்பிரைட்(cellebrite) நிறுவனத்தை அது தொடர்பான சோதனைகளில் இணைத்துக் கொண்டது. இரண்டு அமைப்புகளும் சேர்ந்து நடத்திய ஆய்வில், ஐபோன்களின் பாதுகாப்பை எளிதில் சிதைக்க முடிவதாகவும், ஆண்ட்ராய்டு சாதனங்களில் அப்படிச் செய்ய முடிவதில்லை என்பதும் ஊர்ஜிதமாகி உள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், போஃர்ட் வொர்த்(Fort worth) காவல் துறையின் டிஜிட்டல் தடயவியல் நிபுணர் ரெக்ஸ் கிசர் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், சமீபமாக, ஐ-போன்களுக்குள் தங்களால் எளிதில் நுழைய முடிவதாகவும், கடந்த ஒராண்டுக்கு முன்பு தங்களால் அப்படிச் செய்ய முடிந்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ரெக்ஸ் கிசரின் கருத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில், கடந்தாண்டு, செல்பிரைட் அறிமுகப்படுத்திய
யு.எஃப்.இ.டி பிரிமியம் என்ற சாதனம், ஐபோன் பாதுகாப்பை உடைத்துக்காட்டியது. இதையடுத்து, ஆப்பிள் தன் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் தொழில்நுட்பத்தை புகுத்தியது. அதையும், யு.எஃப்.இ.டி உடைத்துக் காட்டியது. மேலும், ஐ-போன்களில் உள்ள சமூக ஊடக தரவுகள், GPS பயன்பாடுகள், செய்திகள், இன்கமிங் கால் டேட்டாக்கள், பழைய போன்களின் தொடர்பு எண்களை செல்பிரைட்(cellebrite) எளிதாகப் பெற்றது. மின்னஞ்சல் தரவுகளை பிரிப்பது மட்டும் அதில் சாத்தியப்படவில்லை. அதேபோல், ஆண்ட்ராய்டு சாதனங்கங்களான கூகிள் பிக்சல் 2 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 9 ஆகியவற்றின் தரவுகள் எளிதில் எடுக்கப்பட்டன. இதில், ஹவாவே பி-20 ப்ரோ மூலம் எதையும் எடுக்கமுடியவில்லை. இது சட்டப்படியான செயல்பாடுகளுக்கும் பெரும் தடையாக இருப்பதாக கிசர் குறிப்பிட்டுள்ளார். இவற்றின் மூலம், ஐ-போன்களை விட அல்லது ஐ-போன்களுக்கு இணையாக ஆண்ட்ராய்டு செல்போன்களின் பாதுகாப்பு மேம்பட்டுள்ளதும், அதேபோல், ஐ-போன்களின் பாதுகாப்பு தரம் குறைந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. 

Exit mobile version