அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றார் ராஜ்நாத் சிங்

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் தீவிரவாதத்தை தூண்டுவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜப்பான் பிரதமரிடம் குற்றம்சாட்டினார்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 5 நாள் அரசு முறைப் பயணமாக ஜப்பான் மற்றும் தென் கொரிய ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய ராணுவ கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தும், ராணுவ ஒத்தழைப்பு குறித்தும் அவர், அந்நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். முதற்கட்டமாக ஜப்பான் சென்றுள்ள ராஜ்நாத் சிங், அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இருநாட்டு உறவுகள் குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்தும் பேசப்பட்டது. காஷ்மீர் விவகாரம் குறித்து அந்நாட்டு பிரதமரிடம் எடுத்துரைத்த ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக தீவிரவாதத்தை தூண்டுவதாக குற்றம்சாட்டினார். ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் தாகேஷி லவயாவை சந்தித்து ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

Exit mobile version