பிரதமர் மோடியின் அருணாச்சால பிரதேச பயணத்தை எதிர்த்த, சீனாவிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது.
அருணாச்சல பிரதேசம் சென்ற பிரதமர் மோடி, நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார். பிரதமரின் பயணத்தை எதிர்த்த சீனா, எல்லை பிரச்சினையில் குழப்பம் ஏற்படுத்த கூடாது என்று தெரிவித்தது. இருநாட்டு நலன்களை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இதற்கு, அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது. இந்திய தலைவர்கள் மற்ற பகுதிகளுக்கு செல்வதை போல், அருணாச்சல பிரதேசத்திற்கும் செல்வதாகவும், சீனாவிடம் பலமுறை இதை தெரிவித்து விட்டதாகவும் கூறியிருக்கிறது.