கருப்பு வெள்ளை அவதாரம்!

கால் நூற்றாண்டுக்கு முன்னரே கதாநாயகனாக அறிமுகமான அருண்விஜய், 5 ஆண்டுகளாகத் தான் பிசி நடிகராக வலம் வருகிறார்.

2015ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் மிரட்டும் வில்லனாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் அருண்விஜய். பின்னர் ’குற்றம் 23’, ’செக்கச் சிவந்த வானம்’, தடம், சாகோ என தொடர்ச்சியாக அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற… அவர் தன் நடிப்பை மெருகேற்றி தனக்குகென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாகிக் கொண்டிருக்கிறார்.

 

இந்த கொரோனா காலத்தில் அருண் சமூக வலைத்தளங்களில் நிறையவே நேரத்தைச் செலவிடுகிறார். அவ்வப்போது வித்தியாசமான கோணத்தில் தன்னுடைய ஒயிலான படங்களை வெளியிட்டுவருகிறார். இன்று அவர் வெளியிட்டுள்ள புதிய படங்கள், சமூக வலைத்தளங்களில் பரவலாகிவருகின்றன. பிரபல ஆண்கள் ஆடைவடிமைப்பாளர் ஒஸ்மான் அப்துல் ரசாக்கும் தன் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் இப்படங்களைப் பகிர்ந்துள்ளார். முற்றிலும் கருப்புவெள்ளையாக இருக்கும் அந்த படங்களுக்கு வரவேற்பு எப்படி இருக்குமோ… பார்ப்போம்!

 

 

Exit mobile version