ரபேல் ஊழல் புகாரை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க முடியாது – அருண் ஜேட்லி திட்டவட்டம்

ரபேல் ஊழல் புகாரை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க முடியாது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், ரபேல் ஒப்பந்தத்தை போபர்ஸ் ஒப்பந்தத்துடன் ஒழுக்கக்கேடாக ஒப்பிடும் முயற்சியில் ராகுல்காந்தி ஈடுபட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். ரபேல் ஒப்பந்தத்தில் இடைத்தரகர் இல்லை, லஞ்சம் இல்லை, குவாத்ரோச்சி இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரபேல் விவகாரத்தில் சுதந்திரமான நீதி விசாரணையை உச்ச நீதிமன்றம் நடத்தி இருக்கிறது என தெரிவித்துள்ள அவர், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக நாடாளுமன்ற கூட்டுக்குழு எதையும் கண்டுபிடிக்க முடியாது என அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

Exit mobile version