கிராமப்புற, வேளாண் வளர்ச்சிக்கு ஜி.எஸ்.டி. அமைப்பு அவசியம்

கிராமப்புற மேம்பாடு மற்றும் வேளாண் வளர்ச்சிக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் போன்ற அமைப்பு தேவை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜி.எஸ்.டி. அமைப்பின் மூலம் வர்த்தகர்களும், மக்களும் பயன்பெற்று வருகின்றனர் என்றும், புதிய இந்தியாவை உருவாக்குவதில் இந்த அமைப்பின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். கிராமப்புர மேம்பாடு, வேளாண், ஆரோக்கிய பராமரிப்பு துறைகளில், ஜி.எஸ்.டி கவுன்சில் போன்ற கூட்டாட்சி அமைப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் ஏழை மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள் என்றும், இந்த திட்டத்திற்கு அரசியல் கட்சி என்ற முறையில் பாஜக ஆதரவு அளிக்கும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version