அதிமுக ஆட்சியில் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 51 சதவீதம் என்ற இலக்கை அடைந்ததாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், மதுரை மேற்கு தொகுதியில் காலியாக இருக்கும் 9 ஏக்கர் அரசு நிலத்தில் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
மேலும் மதுரையில் உள்ள பல்கலைக்கழகம் ஏற்று நடத்தும் கல்லூரியில் கட்டணம் கூடுதலாக இருப்பதால், அந்த கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், புதிய அரசுக்கல்லூரி கட்டிடப்பணிகளுக்கு 12 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், மதுரை கல்வியில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக உள்ளதால் புதிய கல்லூரி அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.