தடுப்பு வேலிக்கிடையில் சீசா வைத்து விளையாடும் அமெரிக்க-மெக்சிகோ மக்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைளுக்கு அந்நாட்டு மக்கள் பல விதங்களில் எதிர்ப்பு காட்டி வரும் நிலையில், அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் அவர் எழுப்பியிருக்கும் தடுப்பு வேலியை சிறுவர் விளையாடும் பூங்காவாக சிலர் மாற்றியுள்ளனர்.

மெக்ஸிகோ நாட்டவர்கள், சட்ட விரோதமாக அமெரிக்காவினுள் நுழைவதை தடுக்க, எல்லைப் பகுதியில் தடுப்பு வேலி அமைத்துள்ளார் அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்த வேலியின் அடுக்குகளுக்கு இடையில் ஒரு கலைஞர்கள் குழு குழந்தைகள் விளையாடும் “சீசா ” சீசா அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இதில் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவை சேர்ந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பிரிவினையை மறந்து விளையாடி மகிழ்கின்றனர்.

பிரிவினை மற்றும் இன வெறியை டொனால்ட் டிரம்ப் தூண்டுவதாக பல சர்ச்சைகள் எழுந்து குழந்தைகள் விளையாட்டின் மூலம் டிரம்பின் வெளியுறவுக் கொள்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version