நாசாவின் ’ஆர்டெமிஸ் -1’ ராக்கெட்டில் ஏற்பட்ட திரவ எரிபொருள் கசிவு! 3-வது முறையாக நிறுத்தப்பட்ட ராக்கெட் ஏவும் பணி!

artemis 1 rocket

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ‘ஆர்டெமிஸ் -1’ ராக்கெட்டில் ஹைட்ரஜன் திரவ எரிபொருள் கசிவு ஏற்பட்டதால் ராக்கெட் ஏவும் பணி மீண்டும் நிறுத்தப்பட்டது.

நிலவுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னோட்டமாக ஆர்டெமிஸ் -1 ராக்கெட் மூலமாக விண்கலத்தை சுமந்து நிலவுக்கு சென்று மீண்டும் திரும்பும் வகையில் நாசா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ராக்கெட்டில் மூன்றாவது முறையாக தொடர்ந்து திரவ எரிபொருள் கசிந்ததால் ராக்கெட் ஏவும் பணி ஒத்திவைக்கப்பட்டது. நிலவுக்கு மனிதனை முதல்முறையாக அனுப்பி ஐம்பது ஆண்டுகளை கடந்த பின் மீண்டும் 2025-ல் மனிதனை அனுப்ப அமெரிக்கா முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version