மேட்டூர் அணை நீர் தேக்க பகுதியில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு பறவைகள் தங்குவதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த காவிரி கரையான பண்ணவாடி பகுதியில் வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன. அதிகளவில் குளிர் நிலவுவதால் போதிய உணவு கிடைக்காத காரணத்தால் பறவைகள் இடம் பெயர்ந்துள்ளன. ஐரோப்பிய மத்திய ஆசிய நாடுகளை சேர்ந்த செங்கால் நாரை, ஊசிவால் வாத்து, கருவால் மூக்கன், சிகப்பு வல்லூறு, சாம்பல் நாரை, பட்டைத்தலை வாத்து உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பறவைகள் இனங்கள் வந்துள்ளன. இவை மட்டுமின்றி மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, வெண்கழுத்து நாரை, போன்ற இனங்களையும் இங்கு பார்க்க முடிகிறது. இதனால் இங்கு வரும் அரிய பறவைகளை பாதுகாக்கவும், அவைகள் தங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.