உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தமிழகத்தில் பட்டாசு வெடித்த 1500 பேர் மீது வழக்கு

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் 1500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையின்போது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் எந்த இரண்டு மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பதை தமிழக அரசே முடிவு செய்துக் கொள்ளலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதையடுத்து, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடித்துக் கொள்ள தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் இதுவரை 1500 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். சென்னையில் 343 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைசட்டம் 188 மற்றும் 285 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version