இந்தியா வரும் அதிபர் ட்ரம்ப்-க்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க ஏற்பாடு

வரும் 24ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு வருகை தர உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க, அம்மாநில அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரும் 24ம் தேதி இந்தியா வருகிறார். ட்ரம்ப் வருகையின் போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

அமெரிக்க அதிபரின் வருகையை முன்னிட்டு, அகமதாபாத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் முன்னேற்பாடுகள், நகரை தூய்மை மற்றும் அழகுப்படுத்தும் பணிகளுக்காக அம்மாநில அரசு 100 கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிரம்ப் பயணிக்க இருக்கும் சாலைகளை சீரமைத்தல், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துதல்,  நகரை அழகுபடுத்துதல், சாலையெங்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்துதல் என அனைத்து முன்னேற்பாடுகளையும் குஜராத் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ட்விட்டரில் இந்திய பயணம் குறித்து பதிவிட்டுள்ள ட்ரம்ப், இந்திய பயணத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version