சேலத்தில் 63 பேரை வெறிநாய் கடித்து குதறியதை தொடர்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவல வளாகத்தில் சுற்றித் திரிந்த நாய்கள் பிடிக்கப்பட்டன.
சேலத்தில் கடந்த 19ஆம் தேதி வெறிநாய் ஒன்று, 63 பேரைக் கடித்து குதறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் அரசின் சார்பில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரியும் தெரு நாய்களை பிடிக்க, மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், மாநகர காவல்துறை ஆணையர் அலுவல வளாகத்தில், சுற்றித் திரிந்த 25-க்கும் மேற்பட்ட நாய்களை, சென்னை மாநகர ஊழியர்கள் பிடித்து சென்றனர்.