பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் விமானப் படை அதிகாரி அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார். வாகா எல்லை வழியாக இந்தியா வரவுள்ளநிலையில், அவரை வரவேற்க ஏராளமானோர் குவிந்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்படும் விமானப்படை வீரர் அபிநந்தன் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இன்று மாலை 4 மணிக்கு அவர் இந்தியா அழைத்து வரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, இந்திய எல்லையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வாகா பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் அதிகளவில் அங்கு குவிந்துள்ளனர். பஞ்சாப் முதல்வர் அமிரீந்தர் சிங் அபிநந்தனை வரவேற்கிறார்.
பின்னர் மூத்த ராணுவ அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு, அவர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவார். இதற்கிடையே அபிநந்தனை வரவேற்பதற்காக அவரது பெற்றோர்கள் நேற்று விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லி சென்றனர்.