கஜா புயல் பாதிப்பு குறித்தும், இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. புயலால் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சரிந்துள்ளன. இதற்கான மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலர் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்வது குறித்து பேசப்பட உள்ளது. சேதம் குறித்து முழு அறிக்கையைத் தயார் செய்து, மத்திய அரசிடம் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.