ஆரணி நகராட்சிக்கு சொந்தமான காந்தி காய்கறி சந்தையில் இடிந்து விழுந்த கடைகளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பார்வையிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்துநிலையம் அருகே 49 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காந்தி காய்கறி சந்தையில் 144 கடைகள் செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையால் 6 கடைகள் நேற்று இடிந்து விழுந்தது. வார விடுமுறை என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அதிகாரிகளுடன் நேரில் சென்று சேதமடைந்த கடைகளை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், சந்தையில் உள்ள அனைத்து கடைகளும் அகற்றப்பட்டு 2 கோடியே 37 லட்சதில் புதிதாக 144 கடைகள் கட்டப்படும் என கூறினார்.