ராணுவத்தை நவீன மயமாக்க மத்திய அரசு திட்டம்

முப்படைகளை வலுப்படுத்தும் நோக்கில் வரும் 7 ஆண்டுகளில், 9 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாயை ராணுவத்திற்கு ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகின்றன. தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம், எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று மிரட்டல் விடும் வகையில் பேசி வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் ராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையில் இன்னும் 7 ஆண்டுகளில், 9 கோடியே 36 லட்சம் நிதியை ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஏவுகனைகள், போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள், போர் கப்பல்கள், ஆளில்லா விமானங்கள், கண்காணிப்பு சாதனங்கள் உள்ளிட்ட ஆயுத தளவாடங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. மேலும் டெல்லி, மும்பை உள்ளிட்ட பெரிய நகரங்களின் வான்பகுதியை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Exit mobile version