பயிற்சி முடித்த 385 ராணுவ அதிகாரிகள் முறைப்படி தங்களை இந்திய ராணுவத்தில் இணைத்துக் கொண்டனர்.
ராணுவ தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறும் நபர்களுக்கு உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நகரில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி மையத்தில் அதிகாரிகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தற்போது புதிதாக பயிற்சி முடித்த ராணுவ அதிகாரிகளின் மிடுக்கான அணி வகுப்பு, ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இதில் 385 வீரர்கள் முறைப்படி தங்களை இந்திய ராணுவத்தில் அதிகாரிகளாக இணைத்துக் கொண்டனர். இதுதவிர ஆப்கானிஸ்தான், பூட்டான், மாலத்தீவு, ஃபிஜி, மொரிசீயஸ், பாபுவா நியூ ஜெனிவா, டொங்கா, லெசோதோ மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நட்பு நாடுகளை சேர்ந்த 77 வீரர்களும் டெராடூன் பயிற்சி மையத்தில் பயிற்சியை நிறைவு செய்து அணி வகுப்பில் பங்கெடுத்தனர். ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை வடகிழக்கு பிராந்திய தளபதி லெப்டினென்ட் ஜெனரல் சேரிஸ் மாத்சன் ஏற்றுக்கொண்டார்.