பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றையும், மேலும் 89 செயலிகளையும் தங்களுடைய செல்போன்களில் இருந்து நீக்குமாறு, ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்கள் மற்றும் முக்கியமான தகவல்கள் பகிரப்படுதல் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு, இந்திய ராணுவம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 91 செயலிகளை, வரும் 15ம் தேதிக்குள் தங்கள் செல்போன்களில் இருந்து நீக்குமாறு, வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தினரை, பாகிஸ்தான் மற்றும் சீன உளவுத்துறையினர் ஆன்லைன் மூலமாக தொடர்பு கொண்டு, அவர்களை சிக்க வைக்கும் முயற்சிகள் அதிகரிப்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.