ஆயுதச் சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்கிறார்.
மக்களவையில் அரசியலமைப்புச் சட்டத்தில் 126ஆவது திருத்தம் செய்வதற்கான மசோதா கொண்டுவரப்பட உள்ளது. சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த மசோதாவைத் தாக்கல் செய்கிறார். உறுப்பினர்களின் விவாதத்துக்குப் பின் மசோதா நிறைவேற்றப்படும். பன்னாட்டு நிதிச் சேவை மையங்கள் ஆணைய மசோதாவை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொண்டுவர உள்ளார். இந்த மசோதாவும் உறுப்பினர்களின் விவாதத்துக்குப் பின் நிறைவேற்றப்படும்.
ஏற்கெனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள ஆயுதச் சட்டத் திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் இன்று கொண்டுவருகிறார். இந்த மசோதா உறுப்பினர்களின் விவாதத்துக்குப் பின் நிறைவேற்றப்படும். குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நாளைக்கு மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.