காதல் மனைவியை ஏமாற்றிய ஆயுதப்படை காலவர்

காவலர் பயிற்சிக்கு சென்று வருவதாக கூறி விட்டு, இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ஆயுதப்படை காவலர் மீது முதல் மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியவாணி, அதே பகுதியை சேர்ந்த ஆயுதப்படை காவலராக பணிபுரியும் ராஜாவுடன் காதல் ஏற்பட்டு கடந்த 2017 திருமணம் செய்து கொண்டார். இதற்கு ராஜாவின் பொற்றோர் சம்மதம் தெரிவிக்கததால் அவர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. ராஜா சென்னையில் பணிபுரிந்து வந்ததால், இருவரும் திருமங்கலத்தில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ராஜா பயிற்சிக்காக ராஜபாளையம் செல்வதாக சத்தியவாணியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் பயிற்சி முடிந்து கடந்த அக்டோபர் மாதம் வீட்டிற்கு வந்த அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த சத்தியவாணி, அவரது உறவுக்கார பெண்ணுடன் திருமணம் நடந்ததை அறிந்துள்ளார். இதையடுத்து ராஜா மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் அலுவலகத்தில் சத்தியவாணி புகார் அளித்துள்ளார்.

Exit mobile version