நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த பாலியல் புகார் – நடிகர் அர்ஜூனிடம் பெங்களூர் போலீசார் விசாரணை

நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த பாலியல் புகாரின் பேரில் நடிகர் அர்ஜூனிடம் பெங்களூர் போலீசார் விசாரணை நடத்தினர். படப்பிடிப்பில் தன்னிடம் நடிகர் அர்ஜூன் தவறாக நடந்து கொண்டதாக நடிகை சுருதி ஹரிகரன் பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சுருதி ஹரிகரன் மீது 5 கோடி ரூபாய் கேட்டு பெங்களூரு நீதிமன்றத்தில் நடிகர் அர்ஜூன் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இதற்கு சுருதி ஹரிஹரனும் 2015 ஆம் ஆண்டு தனியார் சொகுசு விடுதியில் அர்ஜூன் அத்துமீறி நடந்து தனது அறைக்கு வரும்படி தன்னை அழைத்ததாக பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில் அர்ஜூன் மீது போலீசார் பாலியல் பலாத்கார முயற்சி உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்கு வருமாறு அர்ஜூனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இதனையடுத்து பெங்களூரு காவல் நிலையத்திற்கு வந்த அர்ஜூனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Exit mobile version