அர்ஜெண்டினாவில் மேடையில் பாடகர் பாடிக்கொண்டிந்தபோது விபத்து

அர்ஜெண்டினாவில் மேடையில் பாடகர் ஒருவர் பாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் நூலிழையில் உயிர் தப்பினார்.

அர்ஜெண்டினாவில் உள்ள ஜூஜூய் மாகாணத்தில் எல் தலார் என்ற விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு லூயிஸ் விலன் என்ற பாடகர் பங்கேற்ற மெல்லிசைக் கச்சேரி நடைபெற்றது. மேடையில் லூயிஸ் உற்சாகமாகப் பாடிக் கொண்டிருந்த போது, மேடையின் மேல் விளக்குகளுக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்புச் சாரம் திடீரெனச் சரிந்து விழுந்தது. இரும்புச் சாரம் லூயிசின் தலையில் தாக்கியதில் அவர் நிலைதடுமாறிக் கீழே விழுந்ததார். இந்த விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Exit mobile version