மக்னா மனிதர்களின் எதிரியா?

தந்தமில்லாமல் ஒரு ஆண்யானை பிறந்தால் கவனம் பெறும். சில ஆண் யானைகள் அப்படிப் பிறந்தால் பேசு பொருளாகும். ஆனால்  ஒரு யானைக்கூட்டமே அப்படிப் பிறந்தால் அப்போதுதான் அது ஆராய்ச்சிப்பொருளாகும். அந்தவகையில் தன் பிறப்பே ஒரு ஆராய்ச்சிப் பொருளாக ஆண்டாண்டு காலங்கள் இருக்கும் மக்னா யானை  ஏன் இப்படிப் பிறக்கிறது தெரியுமா?

ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா, பாரஸ்ட் என இரு வகைகள் உள்ளன.

ஆசியாவிலும் அதேதான். வாழும் இடத்தைப் பொறுத்து யானைகள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தபடுகின்றன. தென்இந்தியாவிலும் இலங்கையிலும் ஒருவகை. வட இந்தியாவிலும் பர்மா பகுதிகளிலும் ஒரு வகை. இந்தோனேஷிய, மலேசிய சுபத்ரா  பகுதி யானைகள் இன்னொரு வகை. இதில் உயரமானவை , குட்டையானவை, நீண்ட உடல், பெரிய நெற்றி , குட்டை துதிக்கை, உரோமங்களற்றவை என உடல்வாரியாக பகுப்பதானால் அத்தனை வித்யாசமான வகைகளை காணலாம்.

அப்படியானல் இவை ஒருவிதமான உடற்குறைபாடு உள்ள யானைகளா? என்றால், வெறுமனே இவற்றை மாற்றுத்திறனாளி யானைகள் என்றும் ஒதுக்கிவிட முடியாது. எனெனில் சமீப காலமாக இப்படி தந்தமில்லா யானைகள் அதிகம் பிறக்கின்றன .அப்படியானல் இப்படிப் பிறப்பொன்று நிகழ்வதற்குக் காரணம் என்னவாயிருக்கும்? புது உயிர்பல்லுருவாக்கம் நடைபெறுகிறதா?

ஆம். தாங்களாகவே முன்வந்து தந்தங்களை தியாகம் செய்துவிட்டன இவற்றின் மூத்த தலைமுறை யானைகள். இதற்கு மனசாட்சியில்லாத மனிதர்களின் தந்தவேட்டைதான் காரணம். தந்ததிற்காக கொல்லப்படும் யானைகள் வெளியில் தெரிந்தன. ஆனால் இதிலிருந்து தப்பிய யானைகள் அதனால் அடைந்த மனஅழுத்ததின் விளைவாக தங்கள் மரபனுக்களில் ஏற்படுத்திக்கொண்ட தகவமைப்பு மாற்றத்தால் இப்படி தப்பி பிறந்தன இந்த தந்தமில்லாத யானைகள். அதீத அழகு ஆபத்து என்பது மனிதர்க்கு மட்டுமல்ல. மனிதர்கண்னில் படும் மற்றவைகளுக்கும்தான்.

மக்னா யானைகள் மனிதர்களின் எதிரி அல்ல. சொல்லப்போனால் மனிதர்கள்தான் மக்னாவின் குலத்துக்கு துரோகம் இழைத்த பாவிகள். இதற்குப் பழிவாங்கும் விதமாகத்தான் கடும் பலமாகவும், தந்தங்கள் இல்லாமலும், மனிதர்களுக்கு எதிரான மனநிலையும் கொண்டு தங்களைத் தகவமைத்துள்ளன.

இவை அன்பிற்கு ஏங்கும் மனிதர்கள் எப்படி நடந்துகொள்வார்களோ அப்படித்தான் நடந்துகொள்ளும். தந்தங்கள் இல்லாததால் பெண் யானைகளால் நிராகரிக்கப்படும். கூட்டத்தோடும் சேர்ந்து வாழ முடியாது. தன் குறையால் நிராகரிக்கப்பட்டு வெறுப்பின் உச்சத்திலிருக்கும் ஒரு மனிதன் நடந்துகொள்வதைப்போலத்தான் இவைகளும் நடந்துகொள்வதை, கொஞ்சம் கவனித்துப்பார்த்தால் அறியமுடியும். 

இவைகள் ஆண்மையற்றவை என்றும் ஒரு மூடநம்பிக்கை உண்டு. உண்மை என்னவெனில் பெண் யானைகள்தான் இவற்றை நிராகரிக்குமே ஒழிய, இவைகளின் மீது குற்றமில்லை. 

அண்மையில் முதுமலையில் தந்தமுள்ள யானைகளைக் கண்டு பயந்த கல்பனா எனும் பெண்யானை தந்தமில்லாத மக்னா ஒன்றுடன் இணைசேர்க்கப்பட்டதும் குறிப்டத்தக்கது. அடங்காது என்று ஒன்று இல்லை. முகாம்களில்  பழக்கப்பட்டபோது இவை மனிதர்களோடு மிக இயல்பாகப் பழகின என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டியது. 

மனிதர்களை எப்படி மனமறிந்து கையாள வேண்டுமோ இந்த மக்னாக்களையும் யானைகளையும் அப்படித்தான் கையாள வேண்டும்.

Exit mobile version