கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னையில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த 24-ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
ஆனால், சென்னையில் வழக்கம் போல சாலைகளில் வாகனங்கள் இயங்குகின்றன.
திருவொற்றியூர், ராஜாக்கடை, தேரடி, காலடிபேட்டை உள்ளிட்ட பகுதிகளில், ஆங்காங்கே வண்டிகளில் காய்கறிகள், பழங்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.
கண் துடைப்புக்காக நெடுஞ்சாலைகளில் மட்டுமே காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், உட்புற சாலைகளில் மக்களின் கூட்டம் கட்டுக்கடங்காத அளவு உள்ளது.
இதனால், தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.