9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் முறையாக மதிப்பெண் வழங்கப்படுகிறதா என்பதை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பதினோராம் வகுப்பு சேர்க்கை, 9-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்களை வழங்குவதை கண்காணிக்க கல்வித்துறை உயர் அதிகாரிகளை அமைத்து தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அரசுப்பள்ளி, தனியார்ப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு, மதிப்பெண்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதையும் அரசு கண்காணிப்பது அவசியம் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.