கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியின் தோட்டக்குறிச்சி வாக்குசாவடியில் நெடு நேரமாக பரபரப்பு நீடிக்கிறது. காரணம், விதிகளை மீறி அராஜகம் செய்து வருகிறது திமுக. அரவக்குறிச்சியின் 256 வாக்குசாவடிகளில் பதற்றமானவை என்று அறிவிக்கபட்டுள்ள 29வாக்குசாவடிகளில் இந்த தோட்டகுறிச்சியில்தான் இதை அரங்கேற்றியிருக்கிறது திமுக.
தேர்தல் நடைபெறும் வாக்குசாவடி மையங்களில் கூட்டங்கூட்டமாக கூடி நின்று குழப்பமேற்படுத்துவதை திமுக தொடர்ந்து செய்து வருகிறது. இன்று காலை 7 மணியளவில் தேர்தல் தொடங்கிய நிலையில் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர். இவர்களைக் குழப்பும் வகையிலும் , திசை திருப்பும் வகையிலும் பெருமளவில் கூட்டம் கூட்டமாக நின்றபடி அசாதாரண சூழலை ஏற்படுத்த முயற்சி செய்தனர்.
வாக்களிக்க வரும் மக்களிடம் விதிகளுக்கு புறம்பாக பேசுவது என குழப்ப முயன்ற திமுகவினர் வாக்குகள் அதிமுக வேட்பாளர்க்கு ஆதரவாக இருப்பதை உணர்ந்த பிறகு வேண்டுமென்றே அமைதிக்கு குந்தகம் விளைவித்து வருகின்றனர். மேலும் கூட்டம் கூட்டமாக வந்த திமுகவினரை கலைந்துபோக அறிவுறுத்திய காவலர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
தொடர்ந்து அங்கிருந்த அதிமுகவினருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் துணை ராணுவம் வரவழைக்கப்பட்டு அசாதாரண சூழ்நிலை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தேவையில்லாமல் இப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்திய திமுக வேட்பாளர் , மாவட்ட செயலாளர், வாக்கு சாவடி கலகக்காரர் ஆகியோர் மீது திமுக தலைமையே நடவடிக்கை எடுக்க வாய்ப்புண்டு என்றும் அப்பகுதி அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இப்படி கலகம் செய்வதே திமுகவினருக்கு தொடர் வேலையாக இருப்பதால் மக்கள் இவர்களை பொருட்டெனவும் மதிக்காமல் ஜனநாயகக் கடமையை ஆற்றிவருகின்றனர்.
தேர்தலின் போதே இப்படி ஆட்டமாடும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் சொல்லவா வேண்டும்? அத்தனைக்கும் பதிலை தங்கள் வாக்குகள் வழியே மக்கள் தெரிவிப்பர்.