அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேட்டுக் கொண்டார்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதனை ஆதரித்து, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் பிற்பகலில் பிரசாரம் செய்தனர். கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.