ஆரணியில் பாதுகாப்பு இடைவெளியின்றி மொத்த விற்பனை காய்கறி கடைகள் செயல்படுவதாகவும், அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளாததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த மொத்த விற்பனை காய்கறி கடைகள், கொரோனா பரவல் காரணமாக இரும்பேடு இந்திராகாந்தி சிலை அருகே இடம் மாற்றம் செய்யப்பட்டது.
அதிகாலை 4 மணி முதல் காய்கறி மொத்த விற்பனை கடைகள் செயல்பட அனுமதி அளித்திருந்த நிலையில், வியாபாரிகள் 2 மணி முதலே வியாபாராத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது.
காய்கறி வாங்க வந்த சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும், பாதுகாப்பு இடைவெளியை பின்பற்றாமல் காய்கறிகளை வாங்க குவிந்தனர்.
இதனை அதிகாரிகளும் கண்டுக் கொள்ளாததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்