அரக்கோணம், அருகே அடித்து கொலை: 4 பேர் கைது

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த அனவர்திகான்பேட்டையை சேர்ந்த ஜெய்லாப்தீன் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆவதம் கிராமத்தை சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரக்கோணம் அடுத்த அனவர்திகான்பேட்டையை சேர்ந்தவர் ஜெய்லாப்தீன். இவர் அதே பகுதியில் உள்ள கோழி இறைச்சிக் கடையில் பணிபுரிந்து வந்தார். ஜெய்லாப்தீன் கடந்த 6ம் தேதி மாலை முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த 7ம் தேதி மதியம் ஆவதம் ஏரியில் குடிமராமத்து பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மண்ணை தோண்டிய போது கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

உடனடியாக தாலூகா காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தினர். விசாரணையில் இறந்தது ஜெய்லாப்தீன் என தெரிய வந்தது.

மேலும் ஆவதம் பகுதியை சேர்ந்த பாலு, அன்பு(எ)அன்பரசு, சூர்யா(எ)சூரியமுர்த்தி, அஜித்(எ)சதீஷ் உள்ளிட்ட 4 நபர்களை பிடித்து விசாரனை நடத்தியதில் இறைச்சி கடையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நடந்த தகராறு காரணமாக பழி வாங்கும் நோக்கில் ஆவதம் ஏரியில் ஜெய்லாப்தீனை 6ம் தேதி இரவு கொலை செய்து கை, கால்களை கட்டி ஏரியில் புதைத்ததாக அளித்த தகவலின் பேரில் நான்கு பேரையு ம் அரக்கோணம் தாலூகா காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version