ஏ.ஆர்.ரஹ்மானின் ''99 சாங்ஸ்'' திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான் தன்னுடைய நைண்ட்டி நைன் சாங்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்.

விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ஈஹன் பட், எடில்ஸி வர்கஸ் நடித்துள்ள திரைப்படம் 99 சாங்க்ஸ். ஒரு பாடகர் மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு எப்படி இசையமைப்பாளர் ஆகிறார் என்பதே படத்தின் கதை என சொல்லப்படும் இந்த படம் பற்றிய அறிவிப்பு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. இப்படத்தில் மனிஷா கொய்ராலா, ரஞ்சித் பரோட் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரதில் நடித்துள்ளனர்.

ஏஆர்.ரஹ்மான் கதை எழுதி தயாரித்துள்ள இப்படம் தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், நான் தயாரித்து எழுதியிருக்கும் முதல் படமான ’99 சாங்ஸ்’ என்ற இசையை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான காதல் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இத்திரைப்படம் சர்வதேச அளவில் இந்தி, தமிழ் மற்றும் மொழிகளில் 2019 ஜூன் 21 ஆம் தேதி வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version