மகனுக்காக இசை ஆல்பம் தயாரிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் இசை ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளார். மகனுக்கு ஆதரவாக அப்பா ரஹ்மானும் இதனை இணைந்து தயாரிக்க அந்த இசை ஆல்பத்திற்கு“சகோ” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்துள்ளார். இதற்கான வீடியோ காட்சிகளை அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். மேலும் இந்த ஆல்பத்தை சோனி நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறும் போது, 25 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட எத்தனையோ பாடகர்களின் பங்களிப்பு நமது வாழ்க்கையை மேன்மையடையவே செய்துள்ளன. அமினுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து, இந்த பாடல் மிகப்பெரிய வெற்றியடையும் என நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

“சகோ”வுடன் எனது இசைப் பயணத்தை தொடங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன். மேலும் மக்கள் என் பாடலை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய ஆவலோடு காத்திருக்கிறேன். இந்த ஆல்பத்தை அப்பாவுடன் இணைந்து தயாரிக்க நிஜமாகவே சவாலாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார் அமீன்.

 

Exit mobile version