ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் A'HR (Kayattam) மலையாளம் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்

மலையாளத் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வரும் மஞ்சு வாரியர், அசுரன் படம் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமாகி எதார்த்தமான நடிப்பில் தமிழ் ரசிகர்களிந் மனதில் முக்கிய இடம் பிடித்தார்.

 

A’HR (Kayattam) என்னும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் டிரைலரை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதுடன், புசன் இண்டர்நேசனல் திரைப்பட விழாவுக்கு (BIFF) இந்தப் படம் தேர்வானதற்காக வாழ்த்தும் தெரிவித்துள்ளார். அதற்கு மஞ்சு வாரியர் நன்றி தெரிவித்து டுவிட் செய்துள்ளார். சனல்குமார் சசிதரன் இப்படத்தை இயக்கியுள்ளார். அவரே எழுத்தும் எடிட்டிங்குமாகக் கலக்கியுள்ளார். சகுசவின் ஒழிவு திவசத்த களி எனும் படம் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது என்பது தமிழகம் அறிந்ததே.

 

 

Exit mobile version