தர்பார் படப்பிடிப்பு தளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட ஏ.ஆர் முருகதாஸ்

தர்பார் படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் .

ரஜினியுடன் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இணைந்துள்ள முதல் படம் தர்பார், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா
களமிறங்கியுள்ளார். இப்படத்தின் first look, second look வெளியான நிலையில் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் நடைப்பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து படப்பிடிப்பின் போது எடுக்கும் ஃபோட்டோக்கள் , வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகிறது என்று பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளார் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ். இந்நிலையில் ”தர்பார் ” படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு வீடியோ எடுத்து அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஏ.ஆர் முருகதாஸ், அதில் உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட பலரிடம் படத்தின் அனுபவத்தை பற்றி கேட்கிறார். மேலும் படப்பிடிப்பு தளத்தில் இருப்பவர்கள் “super star with super director ” என்றும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்றும் கூறியுள்ள வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

 

Exit mobile version