தடுப்பூசி செலுத்தி கொள்ள ஏப். 28-ல் ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

 

மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை அதிகரிக்க தொடங்கியதால் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளது. மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியது. இந்த நிலையில், இதற்கான முன்பதிவு வருகிற 28ஆம் தேதி தொடங்க உள்ளது. கோவின் இணையதளம் மற்றும் ஆரோக்கிய சேது செயலிகள் மூலம் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மற்றும் செயலி மூலம் அருகில் உள்ள தடுப்பூசி மையங்களை கண்டறிந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். கோவாக்சின் முதல் தவணை எடுத்து கொண்ட 28 நாளில் இருந்து 42 நாட்களுக்குள் இரண்டாம் தவணை செலுத்தி கொள்ள வேண்டும் என்றும், கோவிஷீல்ட் முதல் தவணை எடுத்து கொண்ட 28 நாளில் இருந்து 56 நாட்களுக்குள் இரண்டாம் தவணை செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version