தமிழகத்தில் 11 புதிய நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் 11 புதிய நிறுவனங்களை திறக்க மற்றும் விரிவாக்கம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் வானூர்தி உதிரி உற்பத்திக்கான புதிய கொள்கைக்கு அனுமதித்தும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் புதிய தொழில் தொடங்க வகுக்கப்பட்ட கொள்கைக்கான ஒப்புதலையும் அமைச்சரவை அனுமதித்துள்ளது. அதே போல் இன்று நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் கூட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.