அரசு மானியங்களுக்கு ஆதாரை பயன்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரசு மானியங்களுக்கு ஆதாரை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இந்திய மக்களுக்கு 12 இலக்கங்களைக்கொண்ட ஆதார் அட்டை, அடையாள அட்டையாக தற்போது வரை 128 கோடி பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஆதார் மற்றும் இதர சட்டங்கள் அதிகாரப்பூர்வ திருத்த மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி ஆதார் அடையாள அட்டையை இனி அரசு மானியங்களுக்கும் அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று மாநில அரசுகளின் கோரிக்கைக்கு இணங்க ஆதார் தகவல்களை, மாநில அரசு திட்டங்கள் மற்றும் மானியங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த ஒப்புதல் மூலம் பல்வேறு மக்கள் பயனடைவார்கள் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version