திருப்பதி விமான நிலையத்தில் 1800 சதுர மீட்டர் நிலத்தை ஆந்திர அரசுக்கு குத்தகைக்குக் கொடுக்க ஒப்புதல்

இந்திய உணவுக் கழகத்தின் மூலதனத்தைப் பத்தாயிரம் கோடி ரூபாயாக உயர்த்திக்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

திருப்பதி விமான நிலையத்துக்குச் சொந்தமான ஆயிரத்து 800 சதுர மீட்டர் பரப்பு நிலத்தை ஆந்திர மாநில அரசு விழா அரங்கம் கட்டுவதற்கு 15 ஆண்டுக் குத்தகைக்குக் கொடுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா – சவூதி அரேபியா இடையே போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கப் புரிந்துணர்வு உடன்பாடு செய்துகொண்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய உணவுக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை மூவாயிரத்து 500 கோடி ரூபாயில் இருந்து பத்தாயிரம் கோடி ரூபாயாக உயர்த்திக்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா – மியான்மர் இடையே ஆட்கடத்தலைத் தடுக்கச் செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா – சிலி இடையே இரட்டை வரி விதிப்பைத் தவிர்க்கச் செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Exit mobile version