தமிழ்நாட்டில் தடுப்பூசி வழங்குவதில் உரிய முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், ஒரு சிலருக்கு மட்டுமே டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டதால் அதிருப்தியடைந்தனர்.

கோவை சிங்காநல்லூரில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் கொரோனா தடுப்பூசி செலத்தப்பட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக, 500-க்கும் மேற்பட்ட மக்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ஆனால், 50 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டதால், ஏமாற்றமடைந்த 300-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

தடுப்பூசி வழங்குவதில் உரிய முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர்.

 

 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெறும் முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன.

இதற்காக மக்கள் இரவு முதலே நீண்ட வரிசையில் காத்திருந்திருந்தனர். ஆனால், 100 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டதால் மக்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் குறைந்த அளவில் மட்டுமே டோக்கன்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நீண்ட நேரம் காத்திருந்த மக்களுக்கு டோக்கன்கள் கிடைக்காததால் ஏமாற்றத்திற்கு ஆளான அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

இதனிடையே, 2 லட்சத்து 21 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி சென்னை வந்தடைந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு இதுவரை 4 லட்சத்து 55 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி மற்றும் 24 லட்சத்து 62 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி என மொத்தம் 29 லட்சத்து 18 ஆயிரம் டோஸ்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version