விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு மேற்பார்வையாளர்கள் நியமனம்

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு பொதுப் பார்வையாளர்கள் 2 பேரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதிக்கு சின்ன வீரபத்துருடுவும், நாங்குநேரி தொகுதிக்கு விஜய சுனிதாவும் தேர்தல் பொதுப்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21ம் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து விழுப்புரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியில் தொகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் இதுவரை 1 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version