புதிய மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 5 புதிய மாவட்டங்களை தமிழக அரசு உருவாக்கியது. இந்த நிலையில், இந்த மாவட்டங்களுக்கான, காவல் கண்காணிப்பாளர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி, தென்காசி மாவட்டத்திற்கு சுகுணா சிங், காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மயில்வாகனமும், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு விஜயகுமாரும் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கண்ணனும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஜெயச்சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர மேலும் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version